13237 திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரை.

சு.அருளம்பலம் (மூலம்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, ஓகஸ்ட் 2018, 1வது பதிப்பு, 1937. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xiv, 136 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-59-6.

சங்கநூல்களுள் முதன்மையாகிய பத்துப்பாட்டுகளுள் தலைமை பெற்றது திருமுருகாற்றுப்படையாகும். கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவரான நக்கீரரால் இது அருளப்பட்டது. முருகனின் திருவருளைப் பெற வழிப்படுத்துவதாய் அமைந்த பாடல்களைக் கொண்டது. முருகப்பெருமானின் திருப்படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச் சோலை மலை ஆகியவற்றில் முருகன் எழுந்தருளியிருக்கும் வகையை மிக அழகாக எடுத்துக்கூறுவது. காரைநகர் மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதரான நூலாசிரியர் எழுதியுள்ள இவ்வாராய்ச்சிக் கட்டுரையில் நக்கீரனார் வரலாறு, திருமுருகாற்றுப்படை எழுந்த வரலாறு, திருமுருகாற்றுப்படையின் இயல்பு, இப்பாட்டின் பொருட்சுருக்க வரலாறு, திருமுருகாற்றுப்படை செய்யுள், பொருட்பாகுபாடு, பாட்டின் பொருள்நலம், பாவும் பாட்டின் நடையும், இப்பாட்டிற் காணப்படும் வழிபாட்டு முறை, இப்பாட்டின்கட் காணப்பட்ட பழையநாள் வழக்க ஒழுக்க வரலாற்றுக் குறிப்புகள், விளக்க உரைக் குறிப்புகள், அருஞ்சொற் பொருள் ஆகிய தலைப்புகளில்; அமைந்துள்ளது. இதன் மீளச்சு 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் வெளிவந்துள்ளது. (மூலப் பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 5153).

ஏனைய பதிவுகள்

1xbet Put book of ra casino game Incentive

Articles Finest Bank account No Opening Deposit Expected Banking companies Bankroll Strengthening Merely register for an excellent LetsLucky account and then make a good being