13238 திருமூலர் த்ரிசதீ.

சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷிஓம்ஷர். கொழும்பு 6: மௌனாஷ்ரம் அறக்கட்டளை, இல. 19, ஐ.பீ.சீ. வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

(12) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.

இது திருமூலர் பெருமைகளை தோத்திரமாகக் கொண்டமைக்கப்பெற்றது. திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு என்பர். இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

ஏனைய பதிவுகள்