எஸ்.இராமநாதன் (ஆங்கில மூலத் தொகுப்பாசிரியர்), செல்வம் கல்யாணசுந்தரம், கே.குமாரசிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 4: திருமதி செல்வம் கல்யாணசுந்தரம், திருமூலர் சங்கம், இல.3, ரிட்ஜ்வே பிளேஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: மக்லீன் பிரின்டர்ஸ்).
74 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட சைவத்தமிழ் படைப்பாகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது. சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. திருமந்திரத்தில் தேர்ந்த சில செய்யுள்களை எஸ்.இராமநாதன் அவர்கள் ஆங்கிலத்தில் தேர்ந்து தொகுத்து விளக்கமளித்திருந்தார். இந்நூல் அதன் தமிழாக்கமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31608).