வ.த.இராமசுப்பிரமணியம் (உரையாசிரியர்). தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுலை 2017. (கொழும்பு: கு.அருளானந்தம், அனுஷ் அச்சகம்).
vi, 948 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
முன்னைய இரு பாகங்களையடுத்து மூன்றாவது பாகமாக பன்னிரண்டாம் திருமுறையின் திருத்தொண்டர் புராணம் வெளிவந்துள்ளது. நான்கு பாகங்களில் பன்னிரண்டாம் திருமுறை வெளியிடத்திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அறிஞர் சைவசித்தாந்த இரத்தினம் வ.த.இராமசுப்பிரமணியம் அவர்களின் உரையுடன் கூடியதாக திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் சரிதம் கூறும் பெரியபுராணத்தை வம்பறா வரிவண்டு சருக்கம், புராண வரலாற்றுச் சுருக்கம், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், பாட்டு முதற்குறிப்பு அகராதி ஆகிய நன்கு பிரிவுகளில் மூன்றாவது பகுதியாக வெளியிட்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61915).