சி.கிருஷ்ணபிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: திருமதி கிருஷ்ணபிள்ளை மாணிக்கமலர் நினைவு வெளியீடு, கிரேஸ் கோர்ட் 79/1, ¾, ஜம்பட்டா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2005. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
v, 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.
மாவிட்டபுரம் திருமதி கிருஷ்ணபிள்ளை மாணிக்கமலர் நினைவு வெளியீடாக 15.6.2005 அன்று வெளியிடப்பட்ட இந்நூலில், பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு, பட்டினத்தடிகளின் திருப்பாடல்கள், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, அபிராமி அந்தாதி, சிவபுராணம் ஆகிய பக்தி இலக்கியங்களும், சைவ வாழ்வு, குடும்ப சடங்குகள், அபரக்கிரியைகள், மரணத்தின் பின் மனிதனின் நிலை ஆகிய கட்டுரைகளும், மாவைப்பதி கிருஷ்ணபிள்ளை மாணிக்கமலர் ஞாபகார்த்த புலமைப் பரிசில் நிதியம் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37674).