மு.தியாகராசா (பதிப்பாசிரியர்). கொழும்பு: புராண வித்தகர் மு.தியாகராசா, 3/14, 1/1 பின்வத்தை வீதி, தெகிவளை, 1வது பதிப்பு, மார்ச் 2008. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
(6), 70 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 22×14 சமீ.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்; உள்ளவற்றுள் அறுபது பாசுரங்களைத் தேர்ந்து விளக்கமான உரையுடன் இந்நூலில் ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபரான புராண வித்தகர் மு.தியாகராசா அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார். உரையை விளங்கிப் பாடல்களைப் பாடும்போது எமக்கு மாணிக்கவாசக சுவாமிகளின்; பக்திப் பெருக்கின் உணர்வுகளை அறிந்து அனுபவிக்கும் பேறு கிட்டுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48427).