விஜயகலா மகேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: திருமதி விஜயகலா மகேஸ்வரன், 1வத பதிப்பு, டிசம்பர் 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
xiv, 108 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 21.5×14 சமீ.
இந்நூல் நல்லூரில் ‘மகேஸ்வரன் மணிமண்டபம்’ திறப்பு விழாவன்று வெளியிடப்பட்டது. இம்மலரில் கந்தர்அநுபூதி, கந்தர்அலங்காரம், கந்தபுராணம், திருமுருகாற்றுப்படை, சண்முக கவசம், கந்தசஷ்டி கவசம், தனிப்பாடல், வாழ்த்து, விநாயகர் வணக்கம்- திருப்புகழ், திருவாவிநன்குடி – திருப்புகழ், யமன் வரும்போது துயர்கெட வர- திருப்புகழ், கதிர்காமம் – திருப்புகழ், திருக்கோணமலை- திருப்புகழ், யாழ்ப்பாண நல்லூர் – திருப்புகழ், கந்தவனம் – திருப்புகழ், சிலப்பதிகாரம், திருமந்திரம், திருவருட்பா, அகத்தியப் பஞ்சகம், சண்முக கொம்மி, ஈசனே நல்லூர் வாசனே, பன்னிரு விழியால் அருள்புரிவான், நின்றும் இருந்தும் நடந்தும் நினைமின், பரவ வரமருள், நல்லூரான் திருவடி, ஆசானைக் கண்டேன், அறியாயோ, நல்லூர்க் கந்தசுவாமி திருவிரட்டை மணிமாலை, நல்லூரான் தந்ததும் கொண்டதும், வளநல்லை வடிவேலை வந்தித்தோம், நல்லைக் குமரன்-எங்கள் குலதெய்வம், தில்லை மண்டூர்ப் பதிகம், செல்வச்சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி, மங்களம் ஆகிய 34 தலைப்புகளில் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.