13255 மூலமந்திர யந்தரங்களும் பூஜாவிதியும் அடங்கிய மலையாள மாந்திரீக வராகிமாலை.

எ.நடேச தம்பிரான். கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1957. (கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை).

108 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 1.40, அளவு: 17.5×12 சமீ.

அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் வராஹி அம்மன் என வழங்குவர். வராகி அம்மனை பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்) என்றும் போற்றுவர். சப்தகன்னியருள் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது. ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை. சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் நலம் பெற வேண்டி ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 04312).

ஏனைய பதிவுகள்

13915 எனக்காக அழவேண்டாம்(Don’t cry for me) வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு.

என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா குடும்பம், 47/3, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது