13268 சார்பு மண்டல முதலாளித்துவம்: இலங்கையில் கண்டியின் கிராமங்களில் சமூக பொருளாதார மாற்றங்கள் பற்றிய ஆய்வு.

நியூடன் குணசிங்க (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(16), 121 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-580-2.

மார்க்சிய சமூகவியலாளரும் மானிடவியலாளருமான நியூட்டன் குணசிங்க எழுதிய ’கண்டிப் பகுதியின் கிராமப்புறங்களில் மாற்றமுறும் சமூக பொருளாதார உறவுகள் (Changing Socio-Economic Relations in the Kandyan Country-side) என்ற நூலின் மூன்று முக்கிய அத்தியாயங்களின்  தமிழாக்கமே இந்நூலாகும். அறிமுகம், சார்பு மண்டல முதலாளித்துவமும் பழைய உற்பத்தி உறவுகளை மீள உயிர்ப்பித்தலும், கண்டிய கிராமமான தெலும்கொடவில் சாதியும் வர்க்கமும், யக்கடகமவில் சாதியும் வர்க்கமும் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நியூட்டன் குணசிங்க (1946-1988) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலைச் சிறப்புப் பாடமாகக் கற்றவர். அவுஸ்திரேலியா மொனாஷ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தினையும் பிரித்தானியாவில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக் கற்கைகளுக்கான நிறுவனத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றவர். கொழும்பு, பேராதனைப் பல்கலைக்கழகங்களில் சமூகவியல்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்