தை. தனராஜ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 564 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-3619-00-6.
அமரர் இர. சிவலிங்கம் அவர்களின் மறைவின் பின்னர் அவரது நினைவாக கடந்த 18 ஆண்டுகளிலும் (2000-2018) நிகழ்;த்தப்பட்ட நினைவுப்பேருரைகளின் தொகுப்பு. ‘கல்வியும் சமூகமும்’ என்ற முதலாவது பிரிவில் பெருந்தோட்டத்துறை தமிழ் இளைஞர்: இன்றும் நாளையும் (மு.சின்னத்தம்பி), இளைய மலையகம் புதிய சந்தர்ப்பங்களும் சவால்களும் (வீ.சூரியநாராயணன்), கல்வியும் சமூக நகர்வும்: பெருந்தோட்டச் சமூகம் பற்றிய ஒரு நோக்கு (மா.கருணாநிதி), பெருந்தோட்டப் பெண்கள்: நேற்று, இன்று, நாளை (லலிதா நடராஜா), மலையக மக்களும் புத்திஜீவிகளும் ஒரு மீள்நோக்கு (வ.செல்வராஜா), தமிழர் வரலாறும் பண்பாடும்: தெரிந்ததும் தெரியாததும் (சி.மௌனகுரு), மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள்: சில அவதானிப்புகள் (லெனின் மதிவானம்), மலையக மக்களின் சமூக-பொருளாதாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை (எம்.கணேசமூர்த்தி), மலையகத்தின் அண்மைக்கால நிலச்சரிவுகளும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களும் (எஸ்.வசந்தகுமாரி) ஆகிய ஒன்பது நினைவுப் பேருரைகளும், ‘அரசியலும் மனித உரிமையும்” என்ற இரண்டாவது பிரிவில் பெருந்தோட்டத்துறைச் சிறுவர் உரிமை மீறல்கள்: சிறுவர் தொழிலாளர் பற்றிய விசேட கண்ணோட்டம் (ஷோபனாதேவி இராஜேந்திரன்), சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம்: ஒரு விமர்சன நோக்கு (இரா.ஜெ.ட்ரொட்ஸ்கி), உள்;ராட்சி அதிகார சபைகளும் பெருந்தோட்ட மக்களும்: ஒரு கோட்பாட்டு ரீதியான விமர்சன நோக்கு (இரா.ரமேஷ்), மலையக அரசியல் செல்நெறியும் மலையக மக்களும் (சு.விஜயகுமார்), மலையக மக்களின் வாழ்வியல்: மனித உரிமைகள் நோக்கு (திருமதி யசோதரா கதிர்காமத்தம்பி), புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மலையக சமூகத்தின் அடையாள முனைப்புகள் (பா.கௌதமன்) ஆகிய ஆறு நினைவுப் பேருரைகளும், ‘கலையும் இலக்கியமும்’என்ற இறுதிப் பிரிவில் இலங்கை மலையக இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் அம்சங்கள் (பெ.வேலுசாமி), மலையகம் என்னும் அடையாளம்: மலையக இலக்கியத்தின் வகிபங்கு (தெளிவத்தை ஜோசப்), மலையகத் தமிழரின் புலப்பெயர்வும் இலக்கிய ஆக்கமும்: தமிழ்ச் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (எம்.எம்.ஜெயசீலன்) ஆகிய மூன்று நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62905).