எம்.எஸ்.எம்.அனஸ் (பிரதம ஆசிரியர்), எம்.அல்பிரட் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: ஆய்வு: சமூக விஞ்ஞான ஆய்விதழ், 72, பல்கலைக்கழக வீட்டுத் தொகுதி, மீவத்துற, 1வது பதிப்பு, 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 156 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ.
ஆய்வு சஞ்சிகையின் இரண்டாவது இதழும் மூன்றாவது இதழும் இணைந்ததாக 2001இல் இவ்விதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் நவீன தகவல்-தொடர்பாடல் தொழில்நுட்பங்கள்: அபிவிருத்திச் செய்முறையில் அவை வகிக்கும் பங்கு பற்றிய பரிசீலனை (மா.செ.மூக்கையா), தமிழில் பிறமொழி நாவல்கள்: மராட்டிய நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (செ.யோகராசா), விளம்பரப்படுத்தலின் கட்டுப்பாடுகளும் ஒழுங்குவிதிகளும் (வு.ஏ.தர்மதாசன்), இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை (1948-2000) (அம்பலவாணர் சிவராஜா), ஆசியாவின் இயற்கை வளங்களும் சுற்றாடல் மாசாக்கமும் (ஏ.நஸீர் அகமட், சஞ்சீவி சிவகுமார்), கிரயக் கணக்கீட்டில் மேந்தலைப் பகுப்பாய்வு (எம்.அல்பிரட்), தப்ஸிர் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் (எம்.ஐ.எம்.அமீன்), பேட்ரன்ட் ரஸல் வரை இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய மெய்யியல்: ஒரு சுருக்க விபரம் (M.S.M.அனஸ்) ஆகிய கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.