ஜீ.பகீரதி (ஆசிரியர்), ய.அனுஷா, ம.துஷ்யந்தன் (துணை ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(10), 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சமூகத்தின் (Sociological Society) ஆண்டு வெளியீடு இது. சமூகவியல் சிறப்புக் கற்கைநெறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துரிதமாக வளர்ச்சிபெற்று வருகின்றது. மாணவர் கல்வி ஈடுபாடும், ஆய்வுகளும் வளர்ந்து வருகின்றன. இச்சூழலிலேயே இவ்விரண்டாவது ஏடும் வெளிவந்துள்ளது. மானுடநேயம், குழுவாய் செயற்படும் ஒருங்கிணைவு, மாணவ-ஆசிரியர் புரிந்துணர்வு, திறந்த மனதுடன் பிரச்சினைகளை காரண-காரியரீதியாக அணுகும் தன்மை எனத் தனித்துவம் துலங்க இச்சமூகச் செயற்பாடுகள் அமைகின்றன. அதனை இவ்விதழின் ஆக்கங்களும் பிரதிபலிக்கின்றன. இவ்விதழின் ஆலோசக ஆசிரியர்களாக கலாநிதி என்.சண்முகலிங்கன், ஜி.எம்.செபஸ்தியாம்பிள்ளை ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.