J.M.T.றொட்றிக்கோ (ஆசிரியர்), ஆர்.இராஜசந்திரிகா (துணை ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(8), 105+8 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சமூகத்தின் (Sociological Society) ஆண்டு வெளியீடு இது. இவ்விதழில் எண்ணக்கருக்கள் என்ற முதற் பிரிவில் உளப்பகுப்பாய்வு (J.M.T.றொட்றிக்கோ), உளப்பிறழ்வு (சபா.ஜெயராசா), அன்னியமாதல் (கு.யசீதரன்), பணிக்குழு ஆட்சி (சி.சுகன்யா), மனித உரிமைகள் (அருள்திரு அ.இ.பேர்னாட்), அகதி (மு.பிரான்சிஸ்பிள்ளை), சமூக ஒன்றுதிரட்டல் (பா.விக்னராணி), உலகமயமாதல் (அ.றொபின்சன்) ஆகிய படைப்பாக்கங்களும், தொல்சீர் சிந்தனையாளரும் கோட்பாடுகளும் என்ற பிரிவில் ஹெகல் ரூ மார்க்ஸ் (இ.இராஜேஸ்கண்ணன்), கார்ல் மார்க்ஸ் ரூ மக்ஸ்வெபர் (துஷ்யந்தன்), ரல்கொட் பார்சன்ஸ் 1902-1979 (தி.ஞானேஸ்வரி), குறியீட்டு இடைவினைக் கோட்பாடு (அ.எ.றிச்சேட்) ஆகிய கட்டுரைகளும், முறையியல் என்ற பிரிவில் கோட்பாட்டுக்கும் ஆய்வுக்கும் இடையிலான உறவு (எஸ்.றமணி), புறத்தேற்று நுண்முறை (த.விஜயகலா), கட்டமைப்பற்ற நேர்காணல் (ச.பத்மநேசன்) ஆகிய கட்டுரைகளும், பெண்ணியம் என்ற பிரிவில் பால்நிலை-ஒரு சமூகவியல் நோக்கு (பெ.கௌரி) என்ற கட்டுரையும், இறுதிப் பிரிவான மானுடவியல் என்ற பிரிவில் மானுடவியல்-ஓர்அறிமுகம் (தி.கிருஷ்ணகுமார்), எம்.என்.ஸ்ரீநிவாஸ் 1916-1999 (என்.சண்முகலிங்கன்) ஆகிய இரு கட்டுரைகளுமாக மொத்தம் 18 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்விதழின் ஆலோசக ஆசிரியராக கலாநிதி என்.சண்முகலிங்கன் பணியாற்றியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 008885).