T.விஜயகலா (ஆசிரியர்), ஆர்.ஜெயந்தினி (துணை ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(10), 115+11 பக்கம், விளக்கப்படங்கள், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சமூகத்தின் (Sociological Society) ஆண்டு வெளியீடு இது. இவ்விதழின் ஆலோசக ஆசிரியராக கலாநிதி என்.சண்முகலிங்கன் பணியாற்றியுள்ளார். இம்மலரில் சமூக மேம்பாடு என்ற பிரிவில் கிராமிய மேம்பாடு (வி.அனுஷா), சமூகப்பணி (வா.வரதகௌரி) ஆகிய கட்டுரைகளும், குடும்பமும் உறவு முறைகளும் என்ற பிரிவில் குடும்பம் (என்.சுகன்யா), தேச வழமையில் குடும்பமும் அதன் உரிமையும் (த.விஜயகலா), உறவுமுறை (ச.பத்மநேசன்), மட்டக்களப்பில் குடிமரபு (ஞா.தில்லைநாதன்), இஸ்ரேலிய கிபுட்ஸ் (ஜோன் பெட்போட்) ஆகிய கட்டுரைகளும், சமயத்தின் சமூகவியல் என்ற பிரிவில் சமய அனுபவங்கள் (இ.இராஜேஸ்கண்ணன்), மதச்சார்பின்மை (ர.வாசுகி) ஆகிய கட்டுரைகளும், உளவியல் என்ற பிரிவில் பரம்பரையும் சூழலும் (எம்.மதனமோகன்), மன அழுத்தம் (எம்.ராசலிங்கம்), சமூகம்சார் உளவியல்-ஓர் அறிமுகம் (அ.டொறின்) ஆகிய கட்டுரைகளும், முறையியல் என்ற பிரிவில் உளவியல் ஆய்வு முறைகள் (இ.விக்னேஸ்வரி), சமூக ஆய்வில் கணனி (ஏ.அமுதினி) ஆகிய கட்டுரைகளும், கோட்பாடுகள் என்ற பிரிவில் (தமிழகத்தில் சாதியமும் கருத்தியலும் (ம.துஷ்யந்தன்), புலனறிவாதமும் தோற்றப்பாட்டியலும் (அ.எ.றிச்சர்ட்) ஆகிய கட்டுரைகளும், மானுடவியல் என்ற இறுதிப்பிரிவில் அவுஸ்திரேலிய முதுகுடியினர் (ரா.சுஜீவா), இனக்குழும இசை (சி.சுகன்யா), சமூக மானுடவியல் புலமாக கட்டடக்கலை (என்.சண்முகலிங்கன்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 008886).