13279 மானுடம் சமூகவியல் ஏடு 5: 2007/2008.

ந.மயூரரூபன் (ஆசிரியர்), எஸ்.சிந்துஜா (துணை ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ்).

vi, 84 பக்கம், விளக்கப்படங்கள், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சமூகத்தின் (Sociological Society) ஆண்டு வெளியீடு இது. இவ்விதழின் ஆலோசக ஆசிரியராக கலாநிதி என்.சண்முகலிங்கன் பணியாற்றியுள்ளார். இவ்விதழில் பின்நவீனத்துவமும் பண்பாட்டை எழுதுதலும் (பக்தவத்சல பாரதி), குறியீட்டு மானிடவியலும் பண்பாட்டின் பொருள் விளக்கமும் (ஜே.ஜெயந்தினி), பின்நவீனத்துவம்: ஒரு விமர்சன நோக்கு (வெ.கிருஷ்ணமூர்த்தி), ரண்டல் கொலின்ஸ் (அ.அமுதினி), றோலண்ட் பார்த் (பா.நிலாந்தி), சமூகவியல் பகுப்பாய்வு  மட்டங்கள் (லூட்ஸ் லூர்து அன்ரனி), கல்வியும் சமூக வகுப்பும் (க.இந்துமதி), உள சமூகப்பணி (ம.துஷ்யந்தன்), உலக நாடுகளில் சிசு மரணம் (எஸ்.எழிலரசி), நோய் நிலைக்கான பண்பாட்டு அர்த்தங்கள் (ச.சிறீகாந்தன்), நேர்காணல்: கேரள நாட்டுப்புறவியலாளர் பேராசிரியர் ராகவன் பய்யநாடு, சமூக மேம்பாட்டுக்கான ஊடக அறிவுக்கல்வி (என்.சண்முகலிங்கன்) ஆகிய கட்டுரைகளும் நூல் அறிமுகங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 044994).

ஏனைய பதிவுகள்