13280 அரும்பண்பாட்டு கோலங்கள் (நடைச்சித்திரம்).

சு.துரைசிங்கம். சுன்னாகம்: சுன்னாகம் கலை இலக்கியச் சங்கம், 118, ஸ்ரேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, ஆவணி 2017. (சுன்னாகம்: கிருஷ்ணா பிறின்ரேர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி).

104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 330., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-38371-0-3.

யாழ்ப்பாண மாவட்டத்தின், குறிப்பாக சுன்னாகம் சார்ந்த பிரதேசத்தின் தனி அடையாளமாகப் பார்க்கப்படும் எமது மரபுரிமைகளுள் மறைந்தவற்றையும், நாம் மறந்தவற்றையும் நினைவுபடுத்தி கவிஞர் துரையர் அவர்கள் இந்நூலை எழுதியிருக்கிறார். எமது முன்னோர்கள் உள்ளுர் மூலவளங்களை வல்லமையாகப் பயன்படுத்தி உணவு, உடை, உறையுள் முதலான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொண்டனர். பின்னர் வரும்; தமது சந்ததியினரும் பயன்படுத்திக்கொள்ளத்தக்க வலிமையான தளபாடங்களை அமைத்துவைத்தனர். பொது நன்மை கருதி மரங்களை நட்டுவைத்ததுடன் தரிப்பிடம், தங்கு மடங்கள், தண்ணீர்த் தொட்டி போன்றவற்றையும் அமைத்து வைத்தனர். காலப்போக்கில் சமூக நடைமுறைகளிலும் பாவனைப்பொருள்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இவை அனைத்தையும் இங்கு தெளிவான புகைப்படங்களுடன் சிறு கட்டுரை வடிவில் நினைவூட்டியிருக்கிறார். இந்நூலில் தேநீர் பாவனையில் வட இலங்கை, சுமைதாங்கி, பனம்பொருட்களில் உமலின் செல்வாக்கு, பனையோலைப் பட்டைகள், தென்பகுதியிலிருந்து வடபகுதிக்கு, வாண விளையாட்டில் வடக்கு, வடபகுதி மக்களின் எண்ணெய் பாவனை, வடபுலக் கால்நடைகளின் அன்றைய நிலை, சங்கடப் படலை, அந்தநாள் மக்களின் உண்கலங்கள், பண்பாட்டுக்கோலங்களின் படங்கள் ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நூல் விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

15494 உரத்துப் பேசும் தென்றல்.

பாலமுனை முபீத் (S.H.A.முபீத்). பாலமுனை: கலாசார அபிவிருத்தி மையம், 1வது பதிப்பு, நவம்பர் 2014. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்). (16), 17-118 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-955-44353-1-5.