13285 கூற்று: பெண்களின் குரல் 25 வருடங்கள்.

சித்ரலேகா மௌனகுரு, மர்லின் வீவர் (பதிப்பாசிரியர்கள்). மட்டக்களப்பு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், இல. 55, லேடி மனிங் டிரைவ், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 10: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ், 5, ஸ்ரோர்க் பிளேஸ்).

xxviii, 261 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×22.5 சமீ., ISBN: 978-955-8695-09-8.

சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் உருவாகி 25 ஆண்டுகளின் நிறைவை ஆவணப்படுத்தும் நூல் இது. இம்மலரில் உள்ளடங்கியுள்ள கட்டுரைகளின் உட்சரடாக மூன்று பிரதான அம்சங்கள் காணப்படுகின்றன. முதலாவதாக பெண்நிலைவாதம்-பெண்நிலை அமைப்புகள் குறிப்பாக சூரியாவின் உருவாக்கச் சூழமைவும், அதன் பயணமும். இரண்டாவது சூரியாவின் செயற்பாடுகள். மூன்றாவது அலுவலர்களின் படிப்பினைகள், எதிர்கொண்ட சவால்கள் பற்றிய கருத்துகளும் மதிப்பீடுகளும். வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பெண்கள் நீதிக்காகவும் தமது அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடிய கதைகளை இம்மலர் பதிவிடுகின்றது. இம்மலரின் ஆசிரியர் குழுவில் அனுராதா இராஜரெத்தினம், சரளா இமானுவல், வினிபிறட் ஜெயசாந்தினி, விஜயலட்சுமி சேகர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்