உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (யாழ்ப்பாணம்: ஈ.எஸ்.அச்சகம்).
(6), 62 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5சமீ.
பால்நிலைச் சமத்துவமா? அது எங்கே? என்ற கேள்வியுடன் தனது கடந்தகால நிகழ்வுகளின் வழியாக, யாழ்;ப்பாணக் குடா நாட்டின் சம்பவக் காட்சிகளின் வழியாக பெண்ணியம்சார்ந்து போராடும்; ஒரு பேனாமுனைப் போராளியாக இந்நூலை உடுவிலூர் கலா படைத்திருக்கிறார். அகம் மகிழ்ந்து சில வரிகள், எமது கலாசாரமே பெண்களை ஓரங்கட்டுவது நீதியா?, ஆண்களே சற்று சிந்தியுங்கள், பெண்ணே இனியாவது பொங்கி எழு, மாறுவாயா பெண்ணே?, நம்பிக்கையோடு போராடுவோம், ஆணாதிக்கத்தில் பெண்கள், நீதி கிடைக்குமா?, படைக்கும் பிரம்மாக்கள் பெண்களே, பெண்களே இனியொரு விதிசெய்ய வாரீர், இனியாவது பெண்களை வாழவிடுங்கள், விழித்தெழு, விழித்தெழு பெண்ணே, ஆணாதிக்கத்தை வென்றிட பெண்களே தயாரா?, சிறுமிகள் பெண்களை வாழவிடுங்கள், விலங்கினை உடைத்து வெளியே வா பெண்ணே, ஆசிரியத்துவத்தைப் புனிதப்படுத்துங்கள், சந்தேகம் முழு விஷம், மறுமணமும் பெண்களும், மாறுவாயா பெண்ணே?, ஆணாதிக்கத்துக்கு சாவுமணி அடிப்போம், ஆண்களே உணர்ந்திடுவீர், விதவைகளுக்கு விடிவு கிடைக்குமா?, கணவனின் பிரிவால் இந்த நிலை, சமூகத்தின் பார்வை மாறவேண்டும், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி இடுவோமா? ஆண்கள் சிந்திக்கவேண்டும், கொடியவர்களுக்கு தண்டனைதான் என்ன?, பெண்ணே உனக்கு, பெண்களைப்பற்றி ஆகிய 30 தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.