உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஆவணி 2013. (யாழ்ப்பாணம்;: ஷாம்பவி பதிப்பகம்;).
x, 138 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ.
இந்நூலில் பெண்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை சுருக்கமாகத் தொகுத்திருக்கிறார். பெண், தாய், தாய்மை, பெண்ணின் மகத்துவம், பெண் மொழிகள், காதல், வரதட்சணை, திருமணம், குடும்ப உறவு, மகப்பேறு, சந்தேகம், மணமுறிவு, விதவை, காமம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, வன்முறையில் பாதிக்கப்பட்ட சில பெண்கள், சட்டவிரோத கருவுறல், விபச்சாரம், தண்டனை, தாழ்வு மனப்பான்மை, தற்காப்பு ஆயுதமும் தன்னம்பிக்கையும், பெண்களின் வேதனைகள், ஆணாதிக்கத்தில் பெண்கள், பெண்ணாதிக்கத்தில் ஆண்கள், உலகில் பதவியில் பெண்கள், இலங்கையில் பதவியில் பெண்கள், பெரியார் வார்த்தையில் பெண்கள், நாடுகளில் பெண்களுக்கான சட்டங்கள், சேவைகளில் பெண்கள், சாதனைகளில் பெண்கள், இன்று பெண்களின் நிலை, வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட பெண்கள், சமுதாயம், சம உரிமை, பொது அமைப்புக்கள், பெண்ணியமும் பெண்களும், தமிழ்ப் பண்பாடும் பெண்களும், தொலைக்காட்சித் தொடர்களும் பெண்களும், இலங்கைப் போராட்டத்தில் பெண்கள், பொதுவாக பெண்கள் பற்றி, பெண்கள் வளர்ச்சியடைய, பெண்கள் பெயரில் சில சிறப்பியல்புகள், பெண்ணே உனக்கு, நல்லதோர் வீணை செய்தே ஆகிய தலைப்புகளில் இந்நூல் பெண்கள் தொடர்பான ஆசிரியரின் கருத்துக் கலசமாக உருவாக்கப்பட்டுள்ளது.