13290 இலங்கைத் தமிழ் மாதர் சங்கம் நூற்றாண்டு சிறப்பு மலர்: 1909-2009.

இந்திரா சதாசிவம் (மலர் ஆசிரியர்). கொழும்பு: இலங்கைத் தமிழ் மாதர் சங்கம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

74 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

திருமதி தயா மகிந்த இலங்கைத் தமிழ் மாதர் சங்கத்தின் தலைவியாகவும் திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் செயலாளராகவும் பணியாற்றிய காலகட்டத்தில் 2009 மே 16 அன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. சங்கத்தின் பல்வேறு செய்திகள், வாழ்த்துரைகள், அறிக்கைகளுடன் ‘சங்க இலக்கியத்திற் பெண்கள்’ (கா.சிவத்தம்பி), ‘பேசுவதால் பயனில்லை’ (கம்பவாரதி இ.ஜெயராஜா), ‘இலங்கைத் தமிழ் மாதர் சங்கத்தின் முன்னாள் தலைவி/போஷகி கனகம்மா ஆழ்வாப்பிள்ளைக்கு நினைவு அஞ்சலி’ (சாரதா நடராஜா) ஆகிய முக்கிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53898).

ஏனைய பதிவுகள்

11175 காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1990.

ப.கோபாலகிருஷ்ணன் (பிரதம ஆசிரியர்). காரைநகர்: திருப்பணிச் சபை, திக்கரை முருகமூர்த்தி ஆலயம், 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம், 121/4, மானிப்பாய் வீதி). (93) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: