செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 5: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 17, பார்க் அவென்யூ, 1வது பதிப்பு, பங்குனி 1994. (கொழும்பு 11: லங்கா ஆசியா பிரின்ட் பிரைவேட் லிமிட்டெட்).
142பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 75.00, அளவு: 22×14 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழில் ஆசிரியரின் சிந்தனைக் கீற்றுக்கள் சில, பத்திரிகைகளில் பெண்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படுதல் தேவைதானா? (லக்ஷ்மி), கட்டுக்கட்டாக கனங்கள் -கவிதை (கமலினி செல்வராசன்),என் மனைவிக்குத் தொழில் இல்லை-கவிதை (அம்ருதா பிரீதம்-மூலம், கமலினி செல்வராசன்-மொழிபெயர்ப்பு), அடிமைப் பெண் -கவிதை, இலட்சியப் பெண்-கவிதை, பெண்நிலைவாத இலக்கியமும் பிரச்சாரமும் (செல்வி திருச்சந்திரன்), இலங்கையில் கல்வியில் பால் சமத்துவநிலை (சுல்பிகா இஸ்மாயில்), திரைப்படங்களில் பெண்கள்: “மறுபடியும்….” ஒரு மாற்றுத்திரைப்படத்தின் தரிசனம் (பவானி லோகநாதன்), காலணியின் பிரயோகம் (பத்மா சோமகாந்தன்), தொழிலாளவர்க்கத்தின் அசமத்துவ பால் நிலைப்பாடு (மலர்மதி), இலங்கையில் தமிழ் பேசும் மகளிரிடையே எழுத்தறிவும், வாசிப்புத்திறனும் (வள்ளி கணபதிப்பிள்ளை), 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டு ஆரம்பகாலப் பகுதிகளில் பத்திரிகைகளில் பெண்கள் பற்றிய நோக்குகள் (நளாயினி கணபதிப்பிள்ளை), இலங்கையின் சமூக, ஜனநாயக சீர்த்திருத்த இயக்கங்களில் முன்னோடிகளான சில தமிழ்ப் பெண்கள் (சித்திரலேகா மௌனகுரு) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18555).