செல்வி திருச்சந்திரன், சி.எஸ்.லக்ஸ்மி (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
vii, 77 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழில் அடடா… அந்தக் கடிதம் (பி.சீதாலட்சுமி), மாயத்திரை- சிறுகதை (சிந்தாமணி), உடலெனும் வெளி (அம்பை), தூரத்து கோடை இடிகள் பற்றிய ஒரு மதிப்புரை (ஏ.இக்பால்), உயிர் நசுக்கப்படுதல் (குட்டி ரேவதி), திரிகொண்ட வெங்கமாம்பா-சிறுகதை (ஜெகாதா), ஈழத்து பெண்போராளிகளது படைப்புக்கள்: சில அவதானிப்புக்கள் (செ.யோகராசா) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 001107).