செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
vi, 87 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழுக்கான ஆசிரியர் குழுவில் தேவகௌரி சுரேந்திரன், மகேஸ் வைரமுத்து, சிவமணி பரராஜசிங்கம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் ‘பெண்களும் இலக்கியமும்’ என்ற முதலாவது பகுதியில் போரையும் அரசியல் வன்முறையையும் எதிர்க்கும் பெண் கவிதைக் குரல் (சித்திரலேகா மௌனகுரு), பெண்நிலைவாதமும் தேசியவாதமும்: ஈழத்துப் பெண் போராளிகளது எழுத்துக்களின் அடிப்படையில் சில புரிதல்கள் (செ.யோகராசா), காலக்கனவு: ஒரு பெண்ணிய நாடகத்தின் ஆக்கம் (பொன்னி அரசு), பெண்நிலைவாத தலித் பார்வையில் சாதிய ஆணாதிக்கமும் அடையாள அரசியலும்: இமையத்தின் ‘செடல்’ நாவல் பற்றிய ஒரு வாசிப்பு (ச.ஆனந்தி), தமிழ் உடலரசியலில் மூன்றாம் பரிமாணம் (குட்டிரேவதி) ஆகிய ஐந்து படைப்பாக்கங்கள் உள்ளன. ‘பெண்களும் சமூகக் கட்டமைப்புகளும்’ என்ற இரண்டாம் பகுதியில் பெண்கள் அனுபவிக்கும் அனர்த்தங்களை எதிர்கொள்ளல் (அனுசூயா சேனாதிராஜா), பண்பாட்டிற்கு மறுபக்கங்களும் உண்டு (செல்வி திருச்சந்திரன்) ஆகிய இரு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 035764).