செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
vi, 107 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழுக்கான ஆசிரியர் குழுவில் தேவகௌரி மகாலிங்கசிவம், மகேஸ் வைரமுத்து, சிவமணி பரராஜசிங்கம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் முன்னுரை, இரண்டு பெண் கவிதைகளின் விழித்துயரம் (தீபச்செல்வன்), பல குரல்கள் ஒரு பதிவு (அம்பை), சுகந்தி சுப்பிரமணியன் பெண்மையின் வழித்தடம் பெண்ணுடலின் ஆரம்பச்சொல் (கடற்கராய்), யாழ் மாவட்டத்தில் பதிவான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் பிரதேச செயலதிகாரியாக (உதயனி நவரத்தினம்), அம்மனுக்கு மனைவியாகும் சிறுமிகள் (ரவிகுமார்), சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: நற்பிட்டிமுனை தமிழ்ப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு (ஜெனிதா மோகன்), இலங்கை தேட்டப்பெண்களும், அயலவர் பெண்கள் குழுக்களும் (லோகாஷினி தங்கையா), பிரெஞ்சுத் திரைப்படம் பற்றி ஒரு விமர்சனக் கண்ணோட்டம் (எம்.கே.முருகானந்தன்), நவீன இலக்கியக் கொள்கைகளை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப வடிவமைத்து இலக்கியம் படைக்கவேண்டும் (நேர்காணல்: அகில்), சங்கப் பாடல்களில் பெண்ணின் உடல் (தி.சு.நடராசன்) ஆகிய பத்து படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 056061).