13306 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 14, 2011).

செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

vii, 109 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 275., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.

இவ்விதழுக்கான ஆசிரியர் குழுவில் தேவகௌரி சுரேந்திரன், மகேஸ் வைரமுத்து, சிவமணி பரராஜசிங்கம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் முன்னுரை, பெண்களின் இன உரிமைப் போராட்டம் (அப்துல் காதர் லெப்பை), சமூகவியல் கோட்பாடுகளும் அவை பற்றிய சில வாதங்களும் (செல்வி திருச்சந்திரன்), தொழிலில் பெண்களின் நிலை-ஏறாவூர் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (எம்.எஸ்.நூர்ஜஹான்), பின்னைப் பெண்ணியங்கள் ஓர் அறிமுகம் (ம.நதீரா), பெண்கள் மீதான வன்முறை தந்தையாதிக்க கருத்தியலை மறுவிசாரணைக்கு உட்படுத்தல் (சந்திரசேகரன் சசிதரன்), பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் (து.ஜீவரதி) ஆகிய ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 056062).

ஏனைய பதிவுகள்