செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
vii, 105 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழுக்கான ஆசிரியர் குழுவில் தேவகௌரி சுரேந்திரன், மகேஸ் வைரமுத்து, சிவமணி பரராஜசிங்கம், நீலா தயாபரன், ஆனந்தி சண்முகசுந்தரம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் நுழைவாயில், சங்ககால சறுக்கல் சிந்தனைகள் (அ.ப.பாலையன்), இன்று உலக பெண்கள் தினம்: நம் ஆதி தாய்கள் கல்லறையில் உருளுகின்றனரா? (மேகன் மர்ஃபி), புதிய சமத்துவ உலகை விழையும் பெண்நிலை சமூகவியல் கோட்பாடுகள்: ஒரு பால்நிலை உசாவல் (சந்திரசேகரன் சசிதரன்), பெண்களின் பால்மை பாலுணர்வுக் கட்டமைப்பை விளங்கிக்கொள்ளல் (ம.தேவகௌரி), தொலைக்காட்சியில் பெண் என்ற பிம்பம்: வெளிப்பாடும்-தடுப்பும் (எம்.பகீரதி), பின் காலனியக் கோட்பாடும் கலை இலக்கியமும் (மேமன்கவி), பேசாமடந்தையாகப் பெண்பிம்பம்: தமிழிலக்கியங்களில் பெண் பேச்சுப் பற்றிய கதையாடல்கள் discourse(நதிரா மரியசந்தனம்), கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் பெண்களின் விம்பம்: ஒரு பெண்நிலை நோக்கு (லறீனா அப்துல் ஹக்) ஆகிய எட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 056078).