சு.சிவரெத்தினம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சு.சிவரெத்தினம், 1வது பதிப்பு, 2015. (களுதாவளை: மாருதி அச்சகம்).
28 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×17 சமீ.
தமிழரின் சமூகவியலில் சாமர்த்தியச் சடங்குகளின் வகிபாகம் பற்றிய சில கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பேராசிரியர் சி.மௌனகுருவின் ‘காலம் என்பது கறங்கு போல் சுழல்வது’ என்ற அறிமுகக் கட்டுரையுடன் தொடங்கும் இந்நூலில் சு.சிவரெத்தினம் (சாமர்த்தியச் சடங்கும் அதன் சமூகத் தளமும்), சி.சந்திரசேகரம் (மட்டக்களப்புத் தமிழரின் உணவுப் பழக்க வழக்கங்கள்) ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.