13311 அலசல்: சமகால அரசியல் நிலைவரங்கள் 2017/2018.

ஜீவா சதாசிவம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xxvii, 311 பக்கம், விலை: ரூபா 695., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-611-3.

மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் உதவி பயிற்சி ஆசிரியராக அறிமுகமானவர். பத்திரிகைத்துறையை தனது முழுநேர பணியாக ஆக்கிக் கொண்டவர். உதவி ஆசிரியர், செய்தி சேகரிப்பாளர், பாராளுமன்ற செய்தியாளர், மலையக செய்திகளுக்கு பொறுப்பாசிரியர் எனப் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். பின்னர் வீரகேசரியில் 2009ஆம் ஆண்டு உதவி ஆசிரியராக இணைந்துக்கொண்ட இவர், மலையகத்துக்கென ஒரு இணைப்பிதழாக வெளிவரும் ‘குறிஞ்சிப்பரல்கள்’ எனும் பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். வாராந்தம் சனிக்கிழமைகளில் வெளியாகும் ‘சங்கமம்’ சிறப்பு பகுதிக்கு பொறுப்பாசிரியராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றி வருகிறார். வீரகேசரி நாளிதழில் அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் செய்து வரும் அதேவேளை வாராந்தம் புதன்கிழமைகளில் விஷேட அரசியல் பத்தியாக ‘அலசல்’ என்னும் பகுதியின் மூலம் தனது பன்முகப் பார்வையை நிரூபித்து வருகிறார். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராகப் பணியாற்றும் இவருக்கு  தமிழகத்தில் ஆண்டு தோறும் பூவரசி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வரும் சிறந்த ஆளுமைகளுக்கான 2016ஃ2017 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது. இந்நூலில் அலசல் பத்தி எழுத்துக்களில் இவரது தேர்ந்த 64 சமகால அரசியல் நிலவரங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65005).

ஏனைய பதிவுகள்