க.மகேசன். யாழ்ப்பாணம்: க.மகேசன், 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).
228 பக்கம், விலை: ரூபா 4.25, அளவு: 18.5×13 சமீ.
திருவள்ளுவர் மனித வாழ்க்கையை ஆழமாக அலசி, தெளிவாக உணர்ந்து மக்களின் நல்வாழ்வுக்காகப் பல வழிகளை நமக்குக் குறளமுத வடிவில் தந்துள்ளார். அவ்வாறு தந்த பலவகைக் கருத்துகளில் ஒப்புரவு என்பது மிக உயர்ந்த ஒரு கருத்தாக உள்ளது. ஊரெல்லாம் ஒன்று எனக் கருதி ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதுதான் ஒப்புரவாகும். நூலாசிரியர் மகேசன் தன்நூலுக்கான ஆங்கில விளக்கத்தைப் பின்வருமாறு தருகின்றார். Political Economic and Social interpretation of Thirukkural. தோற்றுவாய், அரசு (அரச உறுப்புக்கள், ஒப்புரவாட்சி, அரசும் சங்கமும்), ஆட்சித் தலைவன் (ஆட்சித் தலைவரின் வாழ்வும் தாழ்வும்), அரசும் குடியும், அரசும் பொருளும், அரசியல் ஆணை (இறைமை, சட்டம் அல்லது அறம், சட்டத்துக்குப் பணிதல், முறைசெய்தல்), அரசாங்க அலுவலாளர் (தெரிந்து தெளிதல், தெளியவேண்டிய இயல்புகள், வினை வகுத்தல், ஒற்றாடல், ஐயுறவு கோடல்), குடிகளின் கடமை (குடிப்பெரியோர், மானம்-குடிப்பற்று), உரிமை அல்லது விடுதலை, எதிர்த்திறம் அல்லது மெய்ப்பொருள் ஆய்வு, சமத்துவம் என இன்னோரன்ன தலைப்புகளில் இந்நூல் விளக்கிச் செல்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2583).