ஏ.சீ.எம்.பளீல். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை வெளியீடு, F.L 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு 12: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, F.L 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
v, 141 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-705-172-7.
தரம் 09 கற்கும் மாணவர்களின் நலன்கருதி புதிய பாடத்திட்டத்திற்கேற்ப குடியியற் கல்வி என்ற இந்நூல் வெளிவந்துள்ளது. 2018ஆம் ஆண்டிற்குப் பின்னர் இப்பாடம் தரம் 9இற் கல்விகற்போருக்கு முக்கிய பாடமாக்கப்பட்டுள்ளது. இந்நூல் இம்மாணவர்களை கருத்திற்கொண்டு பரீட்சை வழிகாட்டியாக, குறிப்புகள், வினா-விடைகள், மாதிரி வினா-விடைகள் ஆகியவற்றுடன் இலகுவான முறையில் எழுதப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு, சமகால மாற்றங்கள், சனநாயக ஆட்சி, உள்ளூராட்சி மன்றங்கள், மோதல் தீர்வு, வேலை உலகிற்கு ஆயத்தமாதல் ஆகிய பாடப் பரப்புகளை உள்ளடக்குகின்றது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24885).