லக்ஷனா பாலகுமாரன். யாழ்ப்பாணம்: செல்வி லக்ஷனா பாலகுமாரன், நீர்வேலி தெற்கு, நீர்வேலி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
xii, 121 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-95091-0-8.
இந்நூல் மேற்காசியாவின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான 14 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அறிமுகம், சுவுட்டவிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்-மேற்காசிய அரசியலில் ரஷ்யாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ளது, சிரிய-ரஷ்ய கூட்டின் வெற்றியும் அமெரிக்காவின் சரிவும், சிரியா மீதான அமெரிக்கக் கூட்டுப் படையின் தாக்குதல் மேற்காசியாவில் பிராந்தியப் போட்டிக்கு வழிவகுத்துள்ளது, மேற்குலக-இஸ்ரேல் தந்திரமும் சிரியா-பாலஸ்தீன விவகாரமும், அணுவாயுத விவகாரத்தில் மேற்கின் இராஜதந்திரத்தை ஈரான் வெற்றிகொள்ளுமா?, இஸ்ரேல்-அமெரிக்க கூட்டின் தந்திரோபாயமே ஈரான் அணு உடன்படிக்கையலிருந்து வெளியேறக் காரணம், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் ஈரான், மேற்காசிய அரசியலில் ஜனநாயக சக்திகளின் எழுச்சிகள்அமெரிக்காவின் உத்திகளுக்கு சவாலாக மாறிவருகின்றன, மேற்காசிய நாடுகள் மீதான அமெரிக்காவின் இராணுவ உத்திகளுக்கு பதில் பொருளாதார உத்திகள், சிரியா – வடகொரியா ஒத்துழைப்பும் அமெரிக்கா எதிர்கொள்ளும் சவாலும், ஈரானின் இராஜதந்திரமும் அமெரிக்காவின் சறுக்கலும், வல்லரசுகளின் வர்த்தகப் போரும் ஜீ-மாநாடும், உலக வர்த்தகப் போரை ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரப்படுத்துகின்றாரா? ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.