13316 பூகோளவாதம் புதிய தேசியவாதம்.

மு.திருநாவுக்கரசு. பிரித்தானியா: தமிழாய்வு மையம், இலங்கை, 1வது பதிப்பு, மாசி 2018. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

lviii, 495 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-3758-00-2.

பொருத்தமானது எதுவோ அதுவே சரியானது. இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்ட கருத்தியலையே இந்நூல் முன்னெடுத்துச் செல்கின்றது. பொருந்தாத சரியென்பது பிழையானது. அது வெறும் கற்பனாவாதமாகவும், தூய்மைவாதமாகவுமே அமையமுடியும். இந்த வகையில் அனைத்துவகை கற்பனாவாதிகளும் தூய்மை வாதிகளும் இறுதி அர்த்தத்தில் எதிரியின் சேவகர்களாவர் என்பதே இந்நூலின் நிலைப்பாடாகும். இந்நூலானது அரசு, அரசியல், இராணுவம், வரத்தகம், அரசியற் பொருளாதாரக் கோட்பாடுகள் என்பனவற்றின் மூலங்களை அடையாளம் கண்டு அவற்றை நீண்ட வரலாற்றுடன் பொருத்தியும் நிகழ்கால வரலாற்றுடன் இணைத்தும் எதிர்கால அரசியலுக்கான இலக்குகளுடன் சேர்த்தும் வரலாற்றை எழுதுவதான முயற்சியை மேற்கொண்டுள்ளது. பூகோளவாதம், மனித வாழ்வை நிர்ணயிக்கும் அரசும் போரும் சமரசமும், தேசியவாதம்: ஐரோப்பா, ஜப்பானிய இஸ்ரேலிய தேசியவாதங்கள், சர்வதேசவாதம் வரலாற்றுப் பின்னணி, பனிப்போர், பனிப்போரின் பின்னான காலமும் தேசிய இனங்களின் விடுதலையும், சர்வதேச பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள்: கோட்பாடும் நடைமுறையும், புதிய தேசியவாதம் நவதேசியவாதம், பூகோளரீதியில் அரசியல் இராணுவ பொருளாதார ஆதிக்கத்தின் உள்ளடக்கம், தமிழீழக் கோரிக்கையின் நீண்ட வரலாறு, புதிய தேசியவாதமும் புதிய தேசிய இனங்களின் விடுதலையும் ஆகிய பன்னிரண்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12096 – சின்மயாக்னி.

பிரம்மச்சாரி ரமண சைத்தன்யா. கொழும்பு: பிரம்மச்சாரி ரமண சைத்தன்யா, ஆச்சாரியர், இலங்கை சின்மயா மிஷன், 1வது பதிப்பு, மே 2004. (கொழும்பு: திருநீலகண்டன், லக்ஷ்மி பிரின்டர்ஸ்). (8), 141 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: