சண் தவராஜா (புனைபெயர்: பூமி புத்திரன்). ஜேர்மனி: அகரம் வெளியீடு, 1வது பதிப்பு, 2019. (திருக்கோணமலை: ஸ்ரீராம் அச்சகம்).
212 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4036-06-2.
இந்நூலில் ஊடகவியலாளர் சண் தவராஜா அவ்வப்போது எழுதிவந்த உண்மைகள் பிடிவாதமானவை, ஒடுக்கப்பட்டோரே ஒடுக்குமுறையாளராக, தேசப்பற்றாளர் ஜி.நடேசன்-சீருடை தரிக்காத புலி, சிவராம்-காலத்தை வென்றவன், திஸ்ஸவின் விடுதலையும் ஸ்ரீலங்காவின் ஊடக சுதந்திரமும், குகநாதன் மீதான தாக்குதல்-நெருங்கிவரும் தமிழ் சிங்கள ஊடகர்கள், முயன்று தவறிக் கற்றல், இலக்கு நோக்கிய பயணம், ஈரடி பின்னால் ஓரடி முன்னால், தேவை இரண்டாவது எழுச்சி, சிங்களத்தின் சீற்றமும் புலம்பெயர் தமிழர்களின் மௌனமும், மறந்திருத்தல்-மறைத்து வைத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னைப் புனரமைக்க வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும், மரத்திலுள்ள பறவையைவிட கையிலுள்ள பறவையே மேல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவநாதன் கிசோர் அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல், அரசு-கூட்டமைப்பு பேச்சுவார்த்தை-மாறாத பாதையில் பயணிக்கும் சிங்கள தேசம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை ஆரம்பம்-சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு, ஸ்ரீலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் தனித்துப் போட்டியிட வேண்டும்?, ராஜபக்ச எதிர் பொன்சேக்கா- வெற்றி யாருக்கு?, சரத் பொன்சேக்காவின் வெற்றி மகிந்தவைச் சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமா?, ஸ்ரீலங்காவின் ஆறாவது அரசுத் தலைவர் தேர்தல்-சில படிப்பினைகள், ஏமாற்றம் தரும் மகிந்தவின் இரண்டாவது பதவிக்காலம், பிரித்தானியாவில் மகிந்த விரட்டியடிப்பு-மறைந்திருக்கும் மர்மம், பொதுத் தேர்தல் முடிவுகள்-தமிழரசுக் கட்சியின் கையில் தமிழர் எதிர்காலம், அவசரகாலச் சட்ட நீக்க அறிவிப்பு-சர்வதேச அழுத்தத்தின் எதிரொலி, அவசரகாலச் சட்ட நீக்கம்- கண்துடைப்பு, எதிர்க் கட்சிக்கு ஒரு கவிதை, தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் தமிழர் தாயகம், தொடர்ச்சியாக மறுக்கப்படும் தமிழ் மக்களுக்கான நீதி, அணையாத் தீபம் அன்னை பூபதி, மட்டக்களப்பை மனதார நேசித்ததால் மரணமான தம்பையா, சிங்களமயமாக்கலைத் தடுக்கும் பணியில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகிய 33 தலைப்புகளில் எழுதப்பட்ட அரசியல் சமூகக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.