13318 உள்ளதைச் சொல்கிறேன் நல்லதைச் சொல்கிறேன்.

தர்மலிங்கம் மனோகரன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஆதிலட்சுமி கிராஃபிக்ஸ்).

xviii, 198 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 135.00, அளவு: 21×14 சமீ.

இந்நூலாசிரியர் தர்மலிங்கம் மனோகரன், தினக்குரல் பத்திரிகையில் தொடராக எழுதிய அரசியல், சமூகம், சமயம், பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பே இதுவாகும். இலங்கையின் சமகால அரசியல் போக்கினை வெளிச்சமிட்டுக் காட்டும் கட்டுரைகள் இவை. இப்படிக் கேட்டால் எப்படி இருக்கும்? கண்ணியமான அரசியலே சமூகத்துக்கு நன்மை தரும், தொடரும் தவறுகள் நிறுத்தப்பட்டால் தமிழ்பேசும் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் இறுக்கமடையும், தமிழ் மொழியுரிமை நடைமுறையில் சாத்தியமாகாமைக்கான காரணம் என்ன? பௌத்த-இந்து சமயத்தவரைப் பிளவுபடுத்தியவை எவை? இருப்பை உறுதிப்படுத்த வாக்களிப்பது அவசியம், அரசியல்வாதிகள் கூட்டிணைவது மட்டும் சமூகநலனுக்குப் பயன்தராது, தமிழர்களின் அரசியல் தளத்தில் பிரதிநிதித்துவ சரிப்பும் சரிவும்-ஒரு பார்வை, இலங்கை உலகின் ஆச்சரியம்மிக்க ஒரு நாடாக வேண்டுமானால் சமத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே ஒரே வழி, தமிழ் மக்களின் ஒற்றுமையே இன்றைய தேவை, அரசியல் அதிகார வெறிக்கு தமது பெறுமதியான சிந்தனைகளை அடிமைப்படுத்திய அரசியல்வாதிகள், தமிழ் மொழி உரிமைக்குத் தடையான இரு தரப்புகள், தமிழ்க் கட்சிகள், அமைப்புகள் தமது பொறுப்புணர்ந்து செயற்படுகின்றனவா, தமிழரை மையமாக வைத்து நடத்தப்படும் பொறுப்பற்ற அரசியல், யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்படவில்லை, சமூக நலனை முன்னிலைப்படுத்த தமிழ்-முஸ்லிம் உறவை வளர்க்குக, சுத்திகரிக்கப்படவேண்டிய தமிழர் அரசியல், இலங்கையில் புறந்தள்ளப்படும் புத்தரின் போதனைகள், உலகப்பொதுமொழி என்ற பெருமை தமிழ்மொழிக்கே உண்டு, தமிழை நிர்வாக மொழியாக்குவதில் எமக்கும் பாரிய பங்குண்டு, தமிழனும் தமிழ்மொழியும், அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போராடிய வடபுலத்தமிழ் அரசர்கள், உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதா-அதனைப் பறிப்பதா இனவாதம்? தோல்வியடைந்த தொழிற்சங்க இயக்கங்கள், இலங்கையின் ஆதிக்குடிகள் யார்-மரபணு ஆய்வின்படியான கண்ணோட்டம், இலங்கைத் தமிழர் வரலாறு திரிபுபடுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும், இன முரண்பாடுகளுக்குத் தீர்வுகண்ட இங்கிலாந்தின் அரசியல் முறைமை ஆகிய 27 தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62449).

ஏனைய பதிவுகள்

14227 பிள்ளையார் பெருங்கதை (வசனம்).

ச.வே.பஞ்சாட்சரம். கனடா: வெள்ளி அச்சுப் பதிப்பகம், மிசிசாகா, ஒன்ராறியோ மாகாணம், 1வது பதிப்பு, புரட்டாதி 2019. (Canada: Silver Print House, 5030, Heatherleigh Ave Unit No. 60, Mississauga, Ontario, L5V