ஏ.எஸ். உதயகுமார். யாழ்ப்பாணம்: Tamil Institute of Political Studies, உடுவில், 1வது பதிப்பு, ஜுலை 1990. (யாழ்ப்பாணம்: குயிலி அச்சகம்).
(6), xii, 248 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
இவ்வாய்வில் தமிழ் அரசியல் கட்சிகளினதும் அவற்றின் தலைவர்களினதும் கொள்கைப் போக்குகள், செயற்பாட்டுத் திட்டங்கள், தந்திரோபாயங்கள் என்பவைக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இவற்றிற்கும் வல்லரசுகளினது ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கைகளுக்குமிடையே நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து வந்த தொடர்புகளும் ஆராயப்பட்டுள்ளன. மேலும், இவற்றால் தமிழ்பேசும் மக்களின் அரசியல் முன்னேற்றத்திலும், பொருளாதார, சமூக முன்னேற்றங்களிலும் ஏற்பட்ட தாக்கங்களும் ஆராயப்பட்டுள்ளன. இங்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் முக்கியமற்றதெனக் கருதப்படுவதால் அவற்றிற்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இங்கே நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளே முக்கியமானவையாகக் கருதப்பட்டுள்ளன. இவ்வாய்வு விவாதங்களூடாகவே நகர்த்திச் செல்லப்படுவது அவதானத்திற்குரியது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 08938).