13323 இலங்கையில் பௌத்தமும் தேசியவாதமும்: கணநாத் ஒபயசேகரவின் ஆய்வுகள் குறித்த ஓர் அறிமுகம்.

க.சண்முகலிங்கம். யாழ்ப்பாணம்: சமூகவெளி படிப்பு வட்டம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).

72 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-95202-0-2.

இலங்கையில் பௌத்தம் என்னும் விடயம் குறித்துச் சிந்தனையைத் தூண்டுவனவும், ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தனவுமான நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிய பேரறிஞராக கணநாத் ஒபயசேகர விளங்குகின்றார். அவரது சிந்தனைகளை தமிழ் வாசகர்களுக்குப் பயன்படக் கூடிய வகையில் இச்சிறுநூல் எடுத்துக் கூறுகின்றது. இரு பகுதிகளிலான இந்நூலின் முதலாவது பகுதி முன்னுரையுடன் கூடிய இரு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பௌத்த சமய சீர்திருத்த இயக்கமும் புரட்டஸ்தாந்திய பௌத்தத்தின் தோற்றமும், பத்தினித் தெய்வ வழிபாடும் சிங்கள பௌத்த பண்பாடும் ஆகிய இரு கட்டுரைகள் இவை. இரண்டாம் பகுதியில் காலமாற்றத்தின் ஊடாக சிங்கள பௌத்த அடையாளம் பற்றி கணநாத் ஒபயசேகர எழுதிய மூன்று கட்டுரைகளின் தமிழாக்கம் இடம்பெற்றுள்ளன. துட்டகைமுனுவின் வீர வரலாறும் அதன் புராணவியல் முக்கியத்துவமும், மகாவம்சமும் சிங்கள பௌத்த அடையாள உருவாக்கமும், சிங்கள பௌத்த அடையாள வலியுறுத்தலும் அநகாரிக தர்மபாலவின் வரலாற்று வகிபாகமும் ஆகிய தலைப்புகளில் இவை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இப்பிரசுரம், சமூகவெளி படிப்பு வட்டத்தின், சிறுநூல் வரிசையில் மூன்றாவது நூலாக வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

17814 திருகணையும் திருமேனியரும்.

சிவா முருகுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: நம்மட முற்றம், 1வது பதிப்பு 2025. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xvi, 110 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20×11.5 சமீ.,

16283 மகிடிக்கூத்து.

சு.சிவரெத்தினம். கொழும்பு 6: கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 116