சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம். கொழும்பு 8: சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், 3, கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, சித்திரை 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
vi, 278 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 955-9062-21-2.
சார்ள்ஸ் அபேசேகரா, கன்னியா சம்பியன், சபினா பெர்னாந்து, மரியோ கோமஸ், நீலன் திருச்செல்வம், டமறிஸ் விக்கிரமசேகர, சூரியா விக்கிரமசிங்க ஆகிய ஆலோசகர்களின் உதவியுடன் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டப் பின்னணி, அவசரகால ஒழுங்குவிதிகள், சிவில் அரசியல் உரிமைகள், வடக்கு கிழக்கு யுத்தம், பொருளாதார சமூக உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், இடம்பெயர்வும் தங்குவதற்கான உரிமையும், குழு உரிமைகள் ஆகிய தலைப்புகளில் இவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31360).