கல்முனையூரான் பதீ (இயற்பெயர்: யூ.எல்.பதீஉஸ் ஸமான்). கல்முனை: தாரிக்கே மில்லத் பதிப்பகம், 383, ஜும்மா மஸ்ஜித் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1923-01-3.
மர்ஹீம் எஸ்.ரி.உஸ்மான் ஸாஹிப் நினைவாக தாரிக்கே மில்லத் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடாக வெளிவரும் நூல் இது. மக்களாட்சியின் மூலதத்துவம் தேர்தல் (தேர்தலின் பூர்வீகம், இங்கிலாந்தின் பாராளுமன்றம், இலங்கையில் மக்களாட்சிக்கான மாற்றம்), தேர்தலுக்கு முன் ஒரு தேடல்: இறைமை யாருக்குச் சொந்தம்? (வரலாற்றில் ஒரு தேர்தல் பிரச்சாரம், தேர்தல் ஓர் அமானிதம், இறைமை, இறைமையின் அமைவிடம், இறைமை அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமானது), இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பரிணாமம் (சட்டசபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், முஸ்லிம்களின் வாக்குரிமை, முஸ்லிம்களின் அரசியல் பலம், கிழக்கின் முஸ்லிம் அரசியல் யுகம்), கிழக்கின் சுடர் ஏறும் பாராளுமன்ற அரசியல் (பாராளுமன்றத்துள் கிழக்குக் காற்று, இருள் கவ்விய விடியல், கிழக்கு வானம் வெளுக்கிறது), முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தசாப்தத்தின் எழுச்சி (பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கு, உதயதாரகையின் சுடரொளி), ஈமானிய அடித்தளத்தில் ஒரு மணல் வீடு (முஸ்லிம் காங்கிரஸ் ஏறிய வெற்றிக் கம்பத்தின் உச்சி, ஒன்றுபட்டதனால் பெற்ற வாழ்வு, ஒரு தளபதி விடைபெற்றார், முஸ்லிம்களுக்குத் தனிக் கட்சி- இது எடுபடுமா?, கொங்கிரீற் மணலாகின்றது), நமக்குத் தேவை ஒரு எம்.பீயே (நாம் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள், எமக்குத் தேவை ஒரு வழிகாட்டியே) ஆகிய தலைப்புகளில் இந்நூல் முஸ்லீம் தேர்தல் அரசியல் பற்றிய கருத்துக்களை வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49923).