கா.குகபாலன். யாழ்ப்பாணம்: பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன், 26/2, சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xviii, 221 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5029-00-6.
இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வின் பின்னணியில் கனேடியத் தமிழர்களின் வாழ்வியல்கூறுகள் பற்றி 14 இயல்களில் புவியியல்துறைப் பேராசிரியரான நூலாசிரியரின் இந்நூல் ஆராய்கின்றது. இலங்கை-கனடா பௌதீகமும் பண்பாடும், வரலாற்று ரீதியாக இலங்கைத் தமிழரின் வாழ்வியல், இலங்கைத் தமிழரின் குடிப்புள்ளியியல் பண்புகள், இலங்கைத் தமிழரின் சர்வதேச புலம்பெயர்வு, கனடாவில் இலங்கைத் தமிழர், கனடாவில் தமிழ் மொழியும் கல்வியும் எதிர்காலமும், புலம்பெயர்வு தாயகத்தில் எற்படுத்திய சமூக பொருளாதார பண்பாட்டு மாற்றங்கள், தாயகத்திலும் கனடாவிலும் முதியோர் வாழ்வு, தமிழர் சமூகத்தில் குடும்ப உறவுச் சிதைவுகள், புலம்பெயர் நிலையில் அரசியல், தமிழர் வர்த்தகம், ஆன்மீக ஈடுபாடு, ஊடகங்கள், ஊர்ச் சங்கங்களின் செயற்பாடுகள் ஆகிய 14 தலைப்புகளில் புகலிடத் தமிழர்கள் தொடர்பான விரிவானதொரு பார்வையை இந்நூல் வழங்குகின்றது.