13330 சமகாலத்தில் சர்வதேசம்: சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள்.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம். யாழ்ப்பாணம்: ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம், 56, கலைமகள் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, சித்திரை 2018. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரிண்டேர்ஸ், இல. 555, நாவலர் வீதி).

xvii, 225 பக்கம், புகைப்படங்கள்;, விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-35598-0-7.

ஆசிரியரால் வீரகேசரி பத்திரிகையில் வாராந்தம் சனிக்கிழமைகளில் எழுதப்பட்ட சர்வதேச அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். வளைகுடாவில் கட்டார் வளைந்துகொடுக்குமா?, பாலஸ்தீன சுதந்திர நாடு உருவாகுமா?, பிறிக்ஸ் உச்சிமகாநாடு 2017, இந்து சமுத்திர மாநாடு சீனாவுக்கு எதிரான நகர்வா?, சீனாவின் பட்டுப்பாதை-முக்கியத்துவம் யாது?, மாலைதீவு அரசியல் நெருக்கடிகள், ஆம்சாங் சூகி ரோகிண்ய மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பாரா?, புன்னகை இராஜதந்திரத்தினால் கொரியா பிணக்கை தீர்க்குமா?, சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐ.நா.வின் வகிபாகம், பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுதல், உலகை உலுக்கிய அமெரிக்க லஸ்வெகாஸ் படுகொலை, சோவியத் யூனியனின் உடைவும் அதிர்வுகளும், ஈராக்கின் நெருக்கடி தொடர்கதையா?, றொபேட் முகாபேயின் எழுச்சியும் வீழ்ச்சியும், இந்திய பாக்கிஸ்தான் உறவு சகஜ நிலைக்குத் திரும்புமா?, ஐ.நாவின் காலநிலை மாற்ற மகாநாடுகள், ஐ.சீ.சீ. தூசு மாசுச் சட்டத்தை நெறிப்படுத்துமா?, ட்ரம்ப் இரட்டைச் சவால்களை வெற்றிகொள்வாரா?, விடைபெற்ற 2017இல் விடைபெறாத விவகாரங்கள், மத்திய கிழக்கில் நெருப்பினை கொழுத்தும் ட்ரம்ப், சுப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசம் சுப்பர் ஆகுமா?, ஈரானின் இரும்புக் கோட்டைக்குள் வெடிப்புகள், பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு- புரட்சிக் கவி பாரதி, ஐ.நா. 72ஆவது அகவை சாதனைகளா? சோதனைகளா?, கட்டலோனியா பிரகடனம் சாதிக்குமா? சோதிக்குமா?, அமெரிக்க ஜனாதிபதியின் தென்கிழக்காசிய பயணம், சவூதி இளவரசர் முகமட் பின் சல்மான் எங்கே போகிறார்? நேபாள இந்து இராஜ்யத்தில் மாவோயிசத்தின் எழுச்சி, ஆப்கானிஸ்தானின் அவலங்கள், அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கிப் பயணிக்குமா? ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 30 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

17335 காகிதக் கப்பல் (2.2).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.,