ஜனனி ரகுராகவன், குமாரவேலு தம்பையா. கொழும்பு: யுனைட்டெட் வெளியீட்டகம், 1வது பதிப்பு, சித்திரை 1996. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
(6), 277 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 23.5×17.5 சமீ.
நூலாசிரியர்கள், திருமதி ஜனனி ரகுராகவன், திரு குமாரவேலு தம்பையா ஆகிய இருவரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை விரிவுரையாளர்களாவர். இந்நூல் சிற்றினப் பொருளியல், பேரினப் பொருளியல் ஆகிய இரண்டையும் இணைத்து எழுதப்பட்டுள்ளது. பொருளியலின் தன்மையும் அதன் ஆய்வுமுறையும், சமூகத்தின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகள், உற்பத்தி சாத்திய வளைகோடும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வும், பொருளாதார ஒழுங்கமைப்புகள், சந்தைப் பொறிமுறை, நெகிழ்ச்சித் தத்துவம், சந்தைச் சமநிலை, உற்பத்திச் செலவுகள், சந்தையும் சந்தையமைப்புகளும், காரணிச் சந்தைக்கோர் அறிமுகம், தேசிய கணக்குகள், அரச நிதியியல், சென்மதி நிலுவை, பணமும் வங்கியியலும் ஆகிய 14 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38479).