ஆசிரியர் குழு. கொழும்பு 8: ஒக்டோபர் புரட்சி நினைவுக் குழு, October Revolution Commemoration Committee 2007, 91, என்.எம்.பெரேரா மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (கொழும்பு 7: ஸ்ரீ வெத்தசிங்க, சேயா பிரின்ட் அன்ட் பிரின்ட்ஸ், 212/12, வாட் பிளேஸ்).
viii, 136 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1319-09-0.
அக்டோபர் புரட்சி (October Revolution) என்பது விளாதிமிர் லெனினாலும் போல்செவிக் கட்சியாலும் தலைமை தாங்கி நடத்தப்பட்ட மாபெரும் ரஷ்யப் புரட்சியாகும். இது புனித பீட்டர்ஸ்பேர்க்கில் 1917 அக்டோபர் 25ஆம் நாளன்று நிகழ்ந்த ஆயுதந் தாங்கிய எழுச்சியால் நிறைவேற்றப்பட்டது. புரட்சியை அனைவரும் ஏற்காததால் 1917 முதல் 1922 வரை உருசிய உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. பின்னர், 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. அது நடந்து 90 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் பாதிப்புபற்றி இலங்கைப் பத்திஜீவிகளின் கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. மும்மொழிகளிலும் வெளிவந்துள்ள இந்நூலில் அக்டோபர் புரட்சி 1917: 90 வருடங்களின் பின்னர் அது பற்றிய ஒரு சிந்திப்பு (கார்த்திகேசு சிவத்தம்பி), அக்டோபர் புரட்சியும் தமிழிலக்கியத்தில் அதன் தாக்கமும் (எஸ்.தில்லைநாதன்) ஆகிய இரு கட்டுரைகளும், October Revolution and the Future of Socialism (Lloyd Fernando), The Great October Revolution Revisited (Carlo Fonseka) ஆகிய இரு ஆங்கிலக் கட்டுரைகளும், தம்ம திசாநாயக்கா, மைக்கல் பெர்னாந்து, டீவ் குணசேகர, ஏ.எம்.நவரத்ன பண்டார, மொஹான் சமரநாயக்க, ரஞ்சன் தேவமித்ர சேனாசிங்க ஆகியோர் எழுதிய ஏழு சிங்கள ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் குழுவில் மைக்கல் பெர்னாண்டோ, சின்னத்தம்பி தில்லைநாதன், ரஞ்சனா தேவமித்ர சேனசிங்க, ஏ.ஜீ.ஜயசேன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10412cc).