சாறுக்க சமரசேகர. இராஜகிரிய: நீதி நியாயத்தைச் சமமாக அணுகும் கருத்திட்டம், இல. 40, புத்கமுவ வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு 10: ளுரூளு பிரிண்டர்ஸ், மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள், 49, ஜயந்த வீரசேகர மாவத்தை).
vi, 26 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இலவசம், அளவு: 21×14.5 சமீ.
நீதி நியாயத்தைச் சமமாக அணுகும் கருத்திட்டத்தின் கீழ் நடாத்தப்படுகின்ற விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டத்திற்காக அச்சிடப்பட்டது. கருத்திட்ட உத்தியோகத்தரான நூலாசிரியர் சாறுக்க ஒரு வழக்கறிஞராவார். இப்பிரசுரம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினதும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினதும் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம், சட்டமயமான பின்னணி, 2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்கம் கொண்ட குடும்ப வன்முறையைத் தவிர்ப்பதற்கான சட்டத்தின் கீழ் குடும்ப வன்முறையை விளங்கிக்கொள்ளக் கூடிய விதங்கள், பாதுகாப்புக் கட்டளை மற்றும் அதனைப் பெற்றுக்கொள்ளல், குறைநிரப்புக் கட்டளை மூலம் துன்பத்துக்கு உள்ளானவர் பெற்றுக்கொள்ளக்கூடிய மேலதிக பாதுகாப்பு, சட்டம் மற்றும் அதன் செயல்முறைப் பாவனை பற்றிய தேவையுடன் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள் (வறுமை காரணமாக நியாயத்தைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் தவறிச் செல்லுதல் தொடர்பாக சட்டத்தின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிவாரணங்கள், நியாயத்தை அடையும் பொருட்டு பின்பற்றப்படவேண்டிய செயல் நடைமுறைகளுக்கு முகம்கொடுப்பதில் ஏற்படுகின்ற கஷ்டங்கள் தொடர்பாக சட்டத்தின் மூலம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள நிவாரணங்கள், சட்டம் பற்றி ஊடகவியலாளர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடயங்கள்) ஆகிய விடயப் பரப்புகளை இந்நூல் விபரிக்கின்றது.