A.W.M. ஹன்சிர். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, மார்ச் 1989. (சென்னை 600001: Three M Publishers மில்லத் பிரின்டர்ஸ், 16, அப்பு மேஸ்திரி சாலை).
140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.
சட்டத்துறையில் ஈடுபாடுள்ள A.W.M. ஹன்சிர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். தீமையும் குற்றமும், குற்றவியல் சட்டத்தின் நோக்கம், குற்றம் என்றால் என்ன? இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் வரலாறு, குற்றத்தின் அடிப்படை உறுப்புகள், மனநிலை வேறுபாடுகள், குற்றமனம் இருக்கவில்லை என்பதைக் காட்டுவதற்கான சந்தர்ப்பங்கள், நிரூபித்தல், தடுக்கப்பட்ட செயலுக்கும் குற்ற மனதுக்குமுள்ள இசைவுகள், கடும் பொறுப்புக் குற்றங்கள், குற்றப் பொறுப்பிலிருந்தும் விதிவிலக்குகள், குற்றம் பற்றிய கூட்டுப் பொறுப்பு, சில குற்றங்கள் உடமைகள் பற்றிய குற்றங்கள், கொலையும் குற்றமுள்ள மரணமும், கொலை செய்தலுக்கும் குற்றமுள்ள மரணத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள், பால் குற்றங்கள் ஆகிய 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 81763).