13344 தமிழீழ தேசவழமைச் சட்டம்: 1993ஆம் ஆண்டின் 03ஆம் இலக்கச் சட்டம்.

தமிழீழ நீதி நிர்வாகத் துறை. தமிழீழம்: தமிழீழ நீதி நிர்வாகத் துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை).

13 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 21.5×14 சமீ.

‘வட தமிழீழத்தில் காணப்பட்ட வழமைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒல்லாந்தரினால் கோவை செய்யப்பட்ட தேச வழமை விதிகளை அடியொற்றியும், இன்றைய சமூக மாற்றத்திற்கும், தேவைகளுக்கும் இணங்கவும் ஒழுங்கு செய்யப்பட்டதான ஒரு சட்டம் இது. தமிழீழ தேசவழமைச் சட்டம் எனப்படும் இச்சட்டம் 1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இத் தேசவழமைச் சட்டத்தில் அடங்கியுள்ளவை வட தமிழீழத்தில் வதியும் சகல தமிழர்கட்கும் அவர்கள் ஆதிக்குடியினராகவிருந்தாலும், அல்லது பின்னர் வந்து குடியேறியவர்களாயினும் ஏற்புடையது. ஆனால் அதே வேளை வட தமிழீழத்தில் உள்ள சகல ஆதனங்களையும் இச்சட்டம் கட்டுப்படுத்தும்’. (நுலின் அறிமுகப் பக்கம்).

ஏனைய பதிவுகள்

14445 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: எளிமை இசை இயக்கம்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மகரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வியியல் நிறுவகம், பானலுவ).