கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2002. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).
vi, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2002ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின்; 37ஆவது இதழ் (16-02-2002) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், Cost of the War (J.S.Tissainayagam), Facts And Figures Third Party Mediation: A Case Study of India’s Intervention in Sri Lanka’s Ethnic Conflict ( Ambalavanar Sivarajah), Cultural Rights in International Law (V.T.Thamilmaran)ஆகிய ஆங்கிலக் கட்டுரைகளும், இலங்கையின் தேசிய இனங்களிடையேயுள்ள உறவுகள் பற்றிய கட்டுரைத் தொகுப்புக்கான முன்னுரையாக சில குறிப்புக்கள் (கா.சிவத்தம்பி), தமிழ் முஸ்லிம் உறவுகள் (M.I.M.மொஹிதீன்), சிங்கள முஸ்லிம் உறவுகள் சில அவதானங்கள் ((M.S.M.அனஸ்), இனமுரண்பாட்டு அரசியலின் பரிணாம வளர்ச்சி (மா.க.ஈழவேந்தன்), இனமுரண்பாட்டு அரசியலின் பரிணாம வளர்ச்சி 2 (சி.அ.யோதிலிங்கம்), பிரிவினை சமாதானமாகுமா (ஜனதா விமுக்கி பெரமுன), இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு அதிகாரப்பங்கீடு விடயங்களில் சர்வதேச அனுபவங்கள் (சி.அ.யோதிலிங்கம்), அரசியல் தீர்வுப் பொதிக்கான ஒரு மாதிரி – ‘தேசபக்தன்’ சஞ்சிகை, சுயநிர்ணயமும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையும் (சி.சிவசேகரம்), அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளும் முஸ்லிம்கள் அதிகப்படியான மாநில சபை ஒன்றின் அவசியமும் (ஆ.ஐ.ஆ.மொஹிதீன்) ஆகிய தமிழ்ப் படைப்புகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28963).