ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம். கொழும்பு 7: ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம், 202-204, பௌத்தாலோக்க மாவத்தை, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்கள் 2005இல் நியுயோர்க்கில் ஆற்றிய உரையின் தமிழாக்கம். தேவையில் இருந்து விடுதலை (தேசிய மூலோபாயங்கள், அபிவிருத்திக்கான நிதியீடு, வர்த்தகம், கடன் நிவாரணம்), அச்சத்திலிருந்து விடுதலை (அழிவுகரமான பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துதல், அணு,இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள், போர் நிகழ்வதையும் அதன் ஆபத்தையும் குறைப்பது, படைப்பலப் பிரயோகம்), கௌரவத்துடன் வாழ்வதற்கான சுதந்திரம் (சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், ஜனநாயகம்), ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தைப் பலப்படுத்துதல் (பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார சமூக மன்றம், உத்தேச மனித உரிமைகள் மன்றம், செயலகம்), முடிவுரை (சந்தர்ப்பமும் சவாலும்) ஆகிய பிரிவுகளின்கீழ் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.