மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).
44 பக்கம், அட்டவணைகள், விலை : குறிப்பிடப்படவில்லை, அளவு : 20.5×15 சமீ., ISBN: 978-955-4746-66-4.
இது ஜனநாயகத்திற்கும் தேர்தலுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான சர்வதேச நிறுவனத்தின் (IDEA) பிரசுரத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. அரசியலமைப்பு தயாரிக்கப்படும் செயன்முறைகள், அரசியலமைப்பின் தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அரசியலமைப்பைக் கட்டியெழுப்பும் செயல்முறையில் எதிர்கொள்ளும் சவால்கள், சுயாதீனத் தெரிவு தொடர்பான பிரச்சினைகள் ஆகிய நான்கு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24847).