மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).
72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4746-68-8.
மனித உரிமைகள் கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல், மனித உரிமைகள் கலாசாரத்தின் பொருள் விளக்கம், அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கை முறையும் மனித உரிமைகள் மாற்றீடுகளும், மோதல் நிலவும் நாடுகளால் அரசியலமைப்பை உருவாக்குதலும் மனித உரிமைக் கலாசாரமும், ஜனநாயகமும் மனித உரிமைகளும், அரசியலமைப்பில் உள்வாங்கும் மனித உரிமைகளைத் தெரிவுசெய்தல், உரிமைகளைச் செயற்படுத்தச் செய்தல், விசேட உரிமைகள் பற்றிய குழப்பநிலை ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24845).