இலங்கை அரசாங்கம். கொழும்பு: அரசகரும தகவல் திணைக்களம், 1வது பதிப்பு, 1965. (கொழும்பு 8: இலங்கை அரசாங்க அச்சகம்).
92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×15.5 சமீ.
அமைச்சுகளுக்குரிய நிர்வாக நடைமுறைகளின் கூற்றுக்கள், கடிதத் தொடர்பு பற்றியும் திணைக்கள நடைமுறை பற்றியும் உள்ள பிரமாணங்கள், அரசாங்க சேவைகள் தொடர்பான பலவினப் பிரமாணங்கள், உத்தியோகத்தர் நடத்தையைக் கட்டுப்படுத்தும் பிரமாணங்கள், உபசார வைபவங்களில் கோலவுடைகள், உடைகள் முதலியனவும் பதக்கங்கள், வரிசைத்தானங்கள் முதலியனவும் ஆகிய ஐந்து இயல்களில் விரிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக மனுக்கள் பற்றிய விதிகள், திணைக்களத் தலைவர்களின் நிரல், இலங்கையர் வரிசைப் பதவி நிரல், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகள் ஆகிய பட்டியல்களும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10158).